மேலும் செய்திகள்
வானுார் நுாலக கட்டடம் திறப்பு விழா
22-May-2025
ஆனைமலை; ஆனைமலையில் கடந்த, 1948ம் ஆண்டு முதல் கிளை நுாலகம், 130 புரவலர்கள், 4,233 உறுப்பினர்களையும் கொண்டு நுாலகம் செயல்படுகிறது.தினமும் வாசகர்கள் பயன்பெறும் வகையில், நுாலகத்துக்கு கூடுதல் கட்டடம் அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. மொத்தம், 20 லட்சம் ரூபாய் செலவில் புதிய இணைப்பு கட்டடம் கட்டப்பட்டது.புதிய இணைப்பு கட்டட திறப்பு விழா நேற்று நடந்தது. தமிழக முதல்வர் ஸ்டாலின், காணொலி வாயிலாக கட்டடத்தை திறந்து வைத்தார். நுாலகர் மீனாகுமாரி வரவேற்றார்.பேரூராட்சி தலைவர் கலைச்செல்வி, வாசகர் சந்திரிகா ஆகியோர் நுாலக கட்டடத்தை பயன்பாட்டுக்கு அளித்தனர். வாசகர் வட்ட தலைவர் ராம்குமார் தலைமை வகித்தார்.நுாலக நன்கொடையாளர்கள் காஜா, சாலமன் ஆகியோர் பங்கேற்றனர். வாசகர் வட்ட உப தலைவர் மணிகண்டன் பேசினார். ஊர்ப்புற நுாலகர் ேஹமலதா நன்றி கூறினார்.ஆனைமலையில் புதியதாக கட்டப்பட்ட நுாலக இணைப்பு கட்டடம், 'வைபை' வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. இது போட்டித்தேர்வாளர்கள், மாணவர்கள் அதிகளவு பயன்படுத்தும் வகையில் வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
22-May-2025