மேலும் செய்திகள்
ஊர்ப்புற நுாலகத்தின் கூடுதல் கட்டடம் திறப்பு
02-May-2025
அன்னுார் ; அன்னுார் கிளை நுாலகம் 17 லட்சம் ரூபாயில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. போட்டித் தேர்வர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.அன்னுார் கிளை நூலகம், 1955ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந் நூலகத்தில் 48,600 புத்தகங்கள் உள்ளன. ஐம்பதுக்கும் மேற்பட்ட தினசரி, வார, மாத இதழ்கள் உள்ளன. நூலக கட்டிடம் கட்டப்பட்டு 25 ஆண்டுகளுக்கு மேலானதால் நூலகத்தை புதுப்பிக்க வேண்டும் கூடுதல் கட்டிடம் கட்ட வேண்டும் தாலுகா அலுவலகமாக தரம் உயர்த்த வேண்டும் என வாசகர் வட்டம் சார்பில் தொடர்ந்து கோரிக்கை அளிக்கப்பட்டது. இதையடுத்து 17 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. நிதி ஒதுக்கப்பட்டு கடந்த நான்கு மாதங்களாக பணி நடந்து வந்தது. தற்போது பணி முடிக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது.வாசகர் வட்ட நிர்வாகிகள் கூறுகையில், 'இங்கு போட்டி தேர்வு எழுதுவோருக்கு வார, மாத இதழ்களும், பொது அறிவு புத்தகங்களும் அதிக அளவில் உள்ளன. மேலும் இலவச வைபை வசதியுடன் கணினிகளும் உள்ளன. எனவே போட்டி தேர்வு எழுதுவோர் கிளை நூலகத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்,' என்றனர்.
02-May-2025