உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உலக சந்தையில் போட்டியிட பிராண்ட் அடையாளம் தேவை

உலக சந்தையில் போட்டியிட பிராண்ட் அடையாளம் தேவை

கோவை; இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.,) கோவை சார்பில், 'வளர்ச்சிக்கான சந்தைப்படுத்துதல்' கருத்தரங்கு, கோவையில் நடந்தது. புல் மெஷின்ஸ் நிர்வாக இயக்குனர் பார்த்திபன் துவக்கி வைத்துப் பேசுகையில், “உலக சந்தையில் போட்டியிட ஒவ்வொரு உற்பத்திப் பொருளுக்கும், வலுவான பிராண்ட் அடையாளம் தேவை. மிக நவீனமான, தொழில்நுட்பத்தில் உயர்ந்த இன்ஜி., பொருளாக இருப்பினும், வாடிக்கையாளரின் கவனத்தை ஈர்க்கவும், நம்பிக்கையை விதைக்கும் வகையிலான விவரம் தேவைப்படுகிறது,” என்றார். சி.ஐ.ஐ., கோவை தலைவர் ராஜேஷ் துரைசாமி பேசுகையில், “உலகளவில் கோவையைக் கொண்டு செல்வது என்பது, உலக புத்தாக்கத்தின் நகரம் என்ற அடையாளத்துடன், கோவையைக் கட்டமைப்பதாகும்,” என்றார். ''சி.ஐ.ஐ., உற்பத்தித் துறை கன்வீனர் மணி நாராயணன் பேசுகையில், “பன்னாட்டு பெரு நிறுவனங்களுக்கே, மார்க்கெட்டிங் பெரும் சவாலாக உள்ள நிலையில், எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்கள், தடைகளை தகர்த்து முன்னேற சக்திமிக்க உத்திகளை வகுக்க வேண்டும்,” என்றார். கருத்தரங்கில், பல்வேறு தொழில்துறையினர் பங்கேற்று, ஏற்றுமதி உத்திகள், அரசு மற்றும் பிற ஆதரவு நடவடிக்கைகள், டிஜிட்டல் மார்க்கெட்டிங், பிராண்டிங் என பல்வேறு தளங்களில் விளக்கம் அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை