மேலும் செய்திகள்
கோவையில் வரும் 21, 22ல் அகில இந்திய ஜவுளி மாநாடு
18 minutes ago
போலி நகை அடகு வைத்து மோசடி; இருவர் கைது
4 hour(s) ago
51 போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்
7 hour(s) ago
பிரமாண்டமான கேரளா பர்னிச்சர் மேளா
7 hour(s) ago
கோவை: பிரதான குழாய் உடைத்து குடிநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை சரவணம்பட்டி சத்தி மெயின் ரோட்டில், பில்லுார் குடிநீர் வினியோகத்துக்கான பிரதான குழாய் பதிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு, இப்பிரதான குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக அப்பகுதியில் அதிகளவு நீர் வெளியேறியது. வெள்ளமாக பெருக்கெடுத்த நீர், அருகில் உள்ள கடைகள், வீடுகளுக்குள் புகுந்தது. இதன் காரணமாக குடியிருப்புவாசிகள் அவதிக்குள்ளாகினர். குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்ய பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டது. ஆனால், உடைப்பு ஏற்பட்ட இடத்தில் பொக்லைன் இயந்திரம் கவிழ்ந்தது. தொடர்ந்து இயந்திரம் மீட்கப்பட்டது. அங்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் குழாயை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். இரண்டரை மணி நேரத்துக்கும் மேலாக பிரதான ரோட்டில் குழாய் உடைத்து நீர் வெளியேறியதால், அவ்வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால், அப்பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டது.
18 minutes ago
4 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago