உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கதவை உடைத்து நகை பணம் திருட்டு

கதவை உடைத்து நகை பணம் திருட்டு

தொண்டாமுத்தூர்; ராமசெட்டிபாளையத்தில், வீட்டின் கதவை உடைத்து, 9 பவுன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.சுண்டக்காமுத்தூரை அடுத்த ராமசெட்டிபாளையம், ஜுடிசியல் காலனியை சேர்ந்தவர் உமாசங்கர்,59. மருந்துகளை மொத்தமாக விற்கும் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த, 2ம் தேதி, தனது மூத்த மகளின் திருமணத்திற்காக, கோவை மாநகருக்கு குடும்பத்துடன் சென்றுவிட்டார்.மகளின் திருமணம் முடிந்த நிலையில், நேற்றுமுன்தினம் வீடு திரும்பியுள்ளார். அப்போது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு, பூஜை அறையில் இருந்த நகை பெட்டியில் வைத்திருந்த, 9 பவுன் நகை மற்றும் 1 லட்சம் ரூபாய் பணம் திருட்டு போயிருந்தது. உமாசங்கர் அளித்த புகாரின் பேரில், பேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி