உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பூட்டை உடைத்து பணம் திருட்டு

பூட்டை உடைத்து பணம் திருட்டு

பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே பூட்டை உடைத்து திருடி சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.பெரியநாயக்கன்பாளையம் ஆனந்தா நகரில் வசிப்பவர் பிரசன்னா, 37. சொந்தமாக பார்மசி வைத்து நடத்தி வருகிறார். இவர் குடும்பத்துடன் தனது அம்மாவை பார்க்க வெளியூர் சென்றார். திரும்பி வந்து பார்க்கும்போது வீட்டின் முன் பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. வீட்டுக்குள் பீரோவில் வைக்கப்பட்டிருந்த வங்கி லாக்கர் சாவி மற்றும், 20 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவை காணவில்லை.இச்சம்பவம் குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை