உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி

கோவை: மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி, கோவை மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் நேற்று நடந்தது. டீன் கீதாஞ்சலி தலைமை வகித்து, பேரணியை துவக்கி வைத்தார். பேரணியாக சென்ற மருத்துவ மாணவர்கள், டாக்டர்கள் மார்பக புற்றுநோய் ஆரம்ப நிலையில் கண்டறிவதன் அவசியம், சரியான நேரத்தில் சிகிச்சை மற்றும் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்வதன் அவசியம் குறித்து, பொதுமக்கள் மத்தியில் விளக்கம் அளித்தனர். டீன் கீதாஞ்சலி மார்பக புற்றுநோய் பரிசோதனை முறைகள், நோயாளி, குடும்பம் அனைவரின் ஒத்துழைப்பும் புற்றுநோய் எதிர்கொள்வதில் அவசியம் என்று வலியுறுத்தி பேசினார். டாக்டர் பிரபாகர் வாழ்க்கை முறை மாற்றம் ஆபத்து காரணிகள் குறித்து விளக்கமளித்தார். டாக்டர் பாலமுருகன், டாக்டர் செல்வராஜ், அரசு மருத்துவமனை செவிலியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி