லஞ்சமா... கூட்டா? போஸ்டரால் பரபரப்பு
போத்தனூர் : கோவை, சுந்தராபுரம் அடுத்து சிட்கோவில் கோவை மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலகம் செயல்படுகிறது. இவ்வலுவலக சுவற்றில், இரு நாட்களுக்கு முன் சுவரொட்டி ஒன்று ஒட்டப்பட்டிருந்தது.அதில், 'கோவை மாசு கட்டுப்பாடு வாரியமே! அரசு அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக செயல்படும் எம். சாண்ட், கிரஷர்கள், தாங்கள் ஆய்வு செய்ய போகும்போது மட்டும், இயங்காமல் இருப்பது ஏன்? ஏ. லஞ்சமா? பி. கூட்டா?; இல்லை இரண்டுமா?' என குறிப்பிடப்பட்டுள்ளது.இப்போஸ்டரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.