சவால்களை சமாளிக்க கற்றுத்தரும் பிருந்தாவன் வித்யாலயா பப்ளிக் பள்ளி
ம துக்கரை பகுதியில் செயல்பட்டு வருகிறது பிருந்தாவன் வித்யாலயா பப்ளிக் பள்ளி. பள்ளி தாளாளர் வசந்தராஜன், பள்ளி முதல்வர் வனிதா திருமூர்த்தி ஆகியோர் கூறியதாவது: பிருந்தாவன் கல்வி அறக்கட்டளை வாயிலாக, நிறுவனர் கனகாசலத்தின் வழிகாட்டுதலின் கீழ் கல்வித்துறையில் உலகளாவிய அனுபவத்துடன் நிர்வகிக்கப்படுகிறது, பிருந்தாவன் வித்யாலயா பள்ளி. போத்தனுாரில் உள்ள பிருந்தாவன் கிட்ஸ் பள்ளி, 2014ல் மதுக்கரை குரும்பபாளையம் பகுதிக்கு பி.வி.பப்ளிக் பள்ளியாக விரிவுபடுத்தப்பட்டது. உயர்ந்த கல்வி என்பது வெறும் தகவல் அல்லது மதிப்பெண்களை மட்டும் தராமல், நம் வாழ்க்கையை அனைத்து உயிரினங்களுடன் இணக்கமாக மாற்றுவதுதான். ஒவ்வொரு தனித்துவமான குழந்தைக்கும் சவாலான, ஊக்கமளிக்கும் சூழலை வளர்ப்பதை நோக்கமாக கொண்டுள்ளோம். தனி நபர்களின் திறனை உணரவும், இயற்கையான விருப்பங்களை பயன்படுத்தவும், அர்த்தமுள்ள சமூக பங்களிப்புகளுக்காக எதிர்கால சவால்களை திறமையாக வழிநடத்தவும் நாங்கள் வழிகாட்டுகிறோம். சி.பி.எஸ்.இ., பிளஸ்2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், 96 சதவீத மதிப்பெண் பெற்று பள்ளிக்கு சிறப்பு சேர்த்துள்ளனர். சி.பி.எஸ்.இ., தேசிய தடகளப்போட்டி 5 தங்க பதக்கம் வென்றுள்ளனர். 17 வயதுக்கு உட்பட்ட 4*100 மீட்டர் தொடர் ஓட்டத்தை, 51.45 வினாடிகளில் கடந்து சாதனை படைத்துள்ளனர். இவ்வாறு, அவர்கள் கூறினர்.