உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வீட்டு கதவை உடைத்து தங்க நகைகள் திருட்டு

வீட்டு கதவை உடைத்து தங்க நகைகள் திருட்டு

கோவை; சேரன் மாநகர், குமுதம் நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார், 37. தனியார் நிறுவன ஊழியர். இவர் தீபாவளி விடுமுறைக்காக கடந்த, 30ம் தேதி தனது சொந்த ஊரான கோபிக்கு சென்றார். பண்டிகை முடிந்து கடந்த 3ம் தேதி கோவை திரும்பினார். அப்போது, வீட்டின் முன் கதவு திறந்திருந்தது. உள்ளே சென்று பார்த்த போது, வீட்டில் இருந்த செயின், கம்மல் உள்ளிட்ட சுமார் 4.5 சவரன் தங்க நகைகள் திருட்டு போயிருப்பது தெரியவந்தது. புகாரின்பேரில், பீளமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை