/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாநகராட்சி அலுவலகத்தில் புரோக்கர்கள் சர்வசாதாரணம்: தலைமை செயலருக்கு சென்றது புகார்
மாநகராட்சி அலுவலகத்தில் புரோக்கர்கள் சர்வசாதாரணம்: தலைமை செயலருக்கு சென்றது புகார்
கோவை: தமிழக அரசின் தலைமை செயலாளர் முருகானந்தத்துக்கு, கோவை மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் கிருஷ்ணசாமி அனுப்பியுள்ள கடித விபரம்:கோவையில் பொதுமக்கள் செலுத்திய நுாலக வரி தொடர்பாக, சில விபரங்கள் கேட்டு, மேயருக்கு கடிதம் எழுதினேன். அதற்கு மாநகராட்சி கமிஷனர் பதிலளிப்பார் என, மேயர் தெரிவித்திருந்தார். இரண்டு மாதமாகியும் அத்தகவல் கிடைக்கவில்லை.கட்டட அனுமதி, சொத்து வரி புத்தகம் வாங்க, சதுரடி கணக்கில் லஞ்சம் வாங்க, மாநகராட்சி கமிஷனர் அலுவலகத்திலேயே புரோக்கர்கள் உள்ளனர். மாநகராட்சி அலுவலகத்துக்குள், லஞ்ச ஒழிப்பு துறை வருவதில்லை. கோவை மக்களை மிரட்டி, லஞ்சம் வாங்குகிறார்கள். இக்குற்றச்சாட்டு தவறாக இருந்தால், என் மீது சட்டப்படி நடவடிக்கை எடுங்கள்.இவ்வாறு, கூறியுள்ளார்.