மேலும் செய்திகள்
பிள்ளையார்பட்டியில் பயனில்லாத பி.எஸ்.என்,எல்.,
22-Nov-2024
கோவை; கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல்., ஊழியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் தர்ணா போராட்டம் நடத்தப்பட்டது.கோவை ஆர்.எஸ்.புரம் பி.ஜி.எம்., அலுவலக வளாகத்தில் நடந்த போராட்டத்தில், ஏராளமானோர் பங்கேற்றனர்.போராட்டத்தில், ஊதியம் மற்றும் ஓய்வூதிய மாற்றங்களில் உடனடியாக தீர்வு காண வேண்டும், பி.எஸ்.என்.எல்., ன், 4 'ஜி' மற்றும் 5 'ஜி' சேவைகளின் துவக்கத்தை விரைவுபடுத்த வேண்டும், இரண்டாவது வி.ஆர்.எஸ்., திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும், ஒப்பந்த ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம், இ.பி.எப்., மற்றும் இ.எஸ்.ஐ., ஆகியவற்றை அமல்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.போராட்டத்துக்கு ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் குடியரசு தலைமை வகித்தார். பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் சங்க மாநிலத் தலைவர் பாபு ராதாகிருஷ்ணன் சிறப்புரை வழங்கினார். ஒருங்கிணைப்பு குழு ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
22-Nov-2024