உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பி.எஸ்.என்.எல்., நெட்ஒர்க் பிரச்னை; கூடுதல் டவர் அமைக்க கோரிக்கை

பி.எஸ்.என்.எல்., நெட்ஒர்க் பிரச்னை; கூடுதல் டவர் அமைக்க கோரிக்கை

வால்பாறை; மழை காலங்களில் ஏற்படும் பி.எஸ்.என்.எல்., 'நெட்ஒர்க்' பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், கூடுதல் 'டவர்' அமைக்க வேண்டும், என, கோரிக்கை விடுத்துள்ளனர்.வால்பாறையில் பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்கள் அதிக அளவில் உள்ளனர். வால்பாறையில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், வங்கிகள், பள்ளிகள், தனியார் நிறுவனங்களில் பி.எஸ்.என்.எல்.,சேவையை தான் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதனையடுத்து, 11 இடங்களில் 'டவர்'கள் அமைக்கப்பட்டுள்ளன.வால்பாறையில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்யும் நிலையில், பல்வேறு இடங்களில் பி.எஸ்.என்.எல்., சேவை அடிக்கடி துண்டிக்கப்படுகிறது. குறிப்பாக, எஸ்டேட் பகுதியில் சேவை துண்டிக்கப்படுவதால், வாடிக்கையாளர்கள் அவசரத்தேவைக்கு யாரையும் தொடர்பு கொள்ள முடியாமல் அவதிக்குள்ளாகினர்.பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்கள் கூறுகையில், 'மழை காலங்களில் அடிக்கடி மின் இணைப்பு துண்டிக்கப்படும் போது, பி.எஸ்.என்.எல்., மொபைல்போன் சேவையும் தடைபடுகிறது.இதனால், வனவிலங்குகள் நடமாட்டம் மிகுந்த எஸ்டேட் பகுதியில் வசிக்கும் தொழிலாளர்கள், அவசரத்தேவைக்கு யாரையும் தொடர்புகொள்ள முடியாமல் தவிக்கின்றனர். இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், எஸ்டேட் பகுதியில் கூடுதல் 'டவர்' அமைத்து, வாடிக்கையாளர்களின் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ