பி.எஸ்.என்.எல்., ஓய்வூதியர் நலச்சங்க கூட்டம்
கோவை; அகில இந்திய பி.எஸ்.என்.எல்., பென்ஷன் வெல்பேர் அசோசியேஷன் ஆண்டு விழா வரும் 20ம் தேதியும், சிறப்பு கூட்டம் செப்., 2ம் தேதியும், கோவை பாரத ஸ்டேட் பாங்க் சாலையில் உள்ள தந்தி அலுவலகத்தில் நடக்கிறது. அன்று கொடியேற்றம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. செப்., 2ம் தேதி, குஜராத் சமாஜில் நடத்தப்படும் சிறப்பு கூட்டத்துக்கு, சங்கத்தின் அகில இந்திய பொது செயலாளர் வரபிரசாத் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். இதில், தற்போது பணியில் இருப்பவர்களுக்கான ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதிய திருத்தம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.