மேலும் செய்திகள்
அய்யலுாரில் ரோட்டோர விபத்து கிணற்றால் அச்சம்
12-Jul-2025
வால்பாறை; விபத்து ஏற்படுவதற்கு முன்னதாக, நடுமலை எஸ்டேட் ரோட்டில் தடுப்புச்சுவர் கட்ட வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வால்பாறை அடுத்துள்ளது நடுமலை எஸ்டேட் இங்குள்ள துண்டுக்கருப்பராயர் சுவாமி கோவில் வழியாக செல்லும் ரோடு, நகராட்சி சார்பில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. மூன்று கி.மீ., துாரம் உள்ள ரோட்டில், தற்போது பல்வேறு இடங்களில் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனிடையே நடுமலை தெற்கு டிவிசன் செல்லும் ரோட்டில் ஆற்றின் அருகே தடுப்புச்சுவர் கட்டப்படாமல் உள்ளது. எஸ்டேட் தொழிலாளர்கள் கூறியதாவது: நடுமலை எஸ்டேட் ரோட்டில், நாள் தோறும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. மிகவும் குறுகலான ரோட்டில் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, நடுமலை துண்டுக்கருப்பராயர் சுவாமி கோவில் வழியாக, தெற்கு டிவிஷன் வரும் ரோட்டில் தடுப்புச்சுவர் இல்லாததால் ரோடு, எந்த நேரத்திலும் சரிந்து விழும் நிலை உள்ளது. எனவே மழைக்கு பின், ஆபத்தான நிலையில் உள்ள வளைவில், நகராட்சி சார்பில் தடுப்புச் சுவர் கட்டித்தர வேண்டும். விபத்து ஏற்பவதற்கு முன்னதாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.
12-Jul-2025