உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஊரக பகுதிகளில் மனைப்பிரிவுகளுக்கு கட்டட அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம்

ஊரக பகுதிகளில் மனைப்பிரிவுகளுக்கு கட்டட அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம்

கோவை; ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில், மனைப்பிரிவுகளுக்கு கட்டட அனுமதிக்கான விண்ணப்பங்களை, இணைய வழியில் பெற்று பயன்படுத்தலாம். கோவை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை:கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில், மனைப்பிரிவுகளுக்கான அனுமதி மற்றும் கட்டட அனுமதிக்கான விண்ணப்பங்கள், இணைய வழியில் மட்டுமே பெற்று வழங்கப்படுகின்றன. தற்போது, 2,500 சதுர அடி வரையிலான மனைப்பரப்பில், 3,500 ச.அடி., வரையிலான கட்டட பரப்பில், தரை அல்லது தரை மற்றும் முதல் தளம் கொண்ட, குடியிருப்புக்கட்டடம் கட்டுவதற்கு ஒற்றைசாளர முறையில், சுயசான்றின் அடிப்படையில் நிபந்தனைகளுக்குட்பட்டு, உடனடி அனுமதி வழங்கும் நடைமுறை, செயல்படுத்தப்பட்டு வருகிறது. இச்சான்று பெறுவதால், கட்டட அனுமதி பெறுவது எளிதாகிறது. தாமதம் தவிர்க்கப்படும். மக்கள் நேரடியாக விண்ணப்பித்து, சுயசான்று மூலம் அனுமதி பெறலாம்.அதனால் சுயசான்று நடைமுறையை பயன்படுத்தி, மக்கள் கட்டட அனுமதிக்கு விண்ணப்பித்து பயனடையலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ