பில்ட்இன்டெக் 2025 கண்காட்சி நிறைவு
கோவை,; வீடு கட்டுவோரும், புதுப்பிப்போரும் பயன்பெறும் வகையில் புதிய தொழில்நுட்பத்துடன் நடந்த, பில்ட்இன்டெக் 2025 கண்காட்சி, நேற்றுடன் நிறைவு பெற்றது.கோவை கொடிசியா தொழில் கண்காட்சி வளாகத்தில் நடந்து வந்த இக்கண்காட்சி, ஏப்.,18ல் துவங்கியது. கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கம் (கொடிசியா) ஏற்பாடு செய்திருந்த இந்த கண்காட்சியில், தமிழ்நாட்டில் இருந்து மட்டுமின்றி, ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும் வர்த்தகர்கள் பங்கேற்றனர்.200க்கும் மேற்பட்ட ஸ்டால்களில், புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகம் செய்யப்பட்டிருந்தன. செங்கல் முதல் பெயின்ட் வரை, அனைத்து கட்டுமான பொருட்களும் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.ரெடிமேட் வீடுகள் அனைவரையும் கவர்ந்தன. ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு இடமாற்றம் செய்து கொள்ள முடியும்.இதுபோன்றே, 10 மீட்டர் வரை உயரமான கட்டடங்களுக்கு பொருட்களை எடுத்து செல்லும் கிரேன் பார்வையாளர்களை கவர்ந்தது.குறைந்தபட்ச விலையில் ரூ.2.5 லட்சம் முதல் அதிகபட்சமாக ஐந்து கோடி ருபாய் வரை, வீடுகளை கட்டும் தொழில்நுட்பங்கள் இடம் பெற்றிருந்தன. கண்காட்சி நேற்றுடன் நிறைவு பெற்றது.