உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பஸ் - சுற்றுலா வேன் நேருக்கு நேர் மோதல்

பஸ் - சுற்றுலா வேன் நேருக்கு நேர் மோதல்

வால்பாறை: வால்பாறை அருகே, அரசு பஸ் -- சுற்றுலா வேன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. பொள்ளாச்சி கிளை அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில், வால்பாறைக்கு நேற்று பஸ் இயக்கப்படுகிறது. மாலை, 3:30 மணிக்கு வால்பாறை காமராஜ்நகர் ரோட்டில், அரசு பஸ் வந்த போது, எதிரே வந்த சுற்றுலா வேன் பஸ் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில், சுற்றுலா வேன் முன்பக்க கண்ணாடி சேதமானது. அரசு பஸ்சின் முன்புறம் பம்பர் சேதமடைந்தது. பஸ் பயணியர் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. விபத்து குறித்து, வால்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !