உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தொழில்கல்வி படிக்க வாங்க! ஐ.டி.ஐ., மாணவர்கள் பேரணி

தொழில்கல்வி படிக்க வாங்க! ஐ.டி.ஐ., மாணவர்கள் பேரணி

வால்பாறை; வால்பாறை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில், சேர்க்கையை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடந்தது. வால்பாறையில், 2022-23ம் கல்வியாண்டு முதல் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் செயல்படுகிறது. இங்கு, பிட்டர், எலக்ட்ரீசியன், பேஷன் டிசைன், டெக்ஸ்டைல்ஸ் மெக்கட்ரானிக்ஸ் ஆகிய பாடப்பிரிவின் கீழ் மாணவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த 2024 முதல் மாணவர்களின் சேர்க்கை படிப்படியாக குறைந்து வருகிறது.கடந்த கல்வியாண்டில், 101 மாணவ, மாணவிகள் படித்தனர். ஆனால் இந்த கல்வியாண்டில், மொத்தம் உள்ள 104 இடங்களில், நேற்று வரை 31 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர். இதனையடுத்து, மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் வகையில் தொழிற்பயிற்சி நிலையத்தின் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் நடராஜ் தலைமை வகித்தார். கல்லுாரி வளாகத்தில் துவங்கிய பேரணியை நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி துவக்கி வைத்தார். பேரணியில் பங்கேற்ற மாணவர்கள், அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்ந்து படிப்பதை வலியுறுத்தி, கோஷமிட்டபடி மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி