உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அங்கீகாரம் பெற்ற சங்கத்தை அழைக்கணும்!

அங்கீகாரம் பெற்ற சங்கத்தை அழைக்கணும்!

பொள்ளாச்சி, ; 'அரசு அங்கீகாரம் பெற்ற சங்கங்களை கொண்டு குறைதீர் கூட்டம் நடத்த வேண்டும்,' என தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் மாவட்ட தலைவர் முரளி சப் - கலெக்டர், நகராட்சி கமிஷனரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு அங்கீகாரம் பெற்ற சங்கங்களை கொண்டு, காலமுறை அரசு அலுவலர் குறைதீர் கூட்டம் நடத்த வேண்டும். அவ்வாறு நடக்கும் கூட்டத்துக்கு நான்கு ஆண்டு காலம் பாரம்பரியம் மிக்க சங்கமும், தமிழக அரசின் அங்கீகாரம் பெற்ற சங்கங்களின் ஒன்றான, தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய சங்கத்தை அழைக்க வேண்டும். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !