தேசிய கல்வி உதவி பெற விண்ணப்பிக்க அழைப்பு
கோவை; 'இளம் சாதனையாளர்களுக்கான தேசிய கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்' என, கலெக்டர் பவன்குமார் அறிவித்துள்ளார். அவரது அறிக்கை: பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் ஆகிய பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கான, பிரதமர் கல்வி உதவித்தொகை திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்படுகிறது. 2025--26ம் ஆண்டுக்கு தேசிய கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க, பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் பயிலும், தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு வழங்கப்படும். பெற்றோரின் ஆண்டு வருவாய், ரூ.2.50 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். 30க்குள் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விபரங்களுக்கு, national Scholorship Portal (https://scholorships.gov.in) இணைய தளத்தில் பார்வையிட்டு, கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம், என தெரிவித்துள்ளார்.