உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விதைச்சான்றுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

விதைச்சான்றுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை:கோவை மாவட்ட, விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மச் சான்றளிப்பு உதவி இயக்குநர் மாரிமுத்து அறிக்கை: கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் மற்றும் சுற்றுப் பகுதிகளில் நெல் மற்றும் பயறு வகை பயிர்கள் புரட்டாசி பட்டத்தில் அதிகம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சம்பா பருவத்தில் நெல் 210 ஹெக்டர் பரப்பிலும், கோ 51, கோ 55, ஏ.எஸ்.டி., 16, சி.ஆர்., 1009, ஐஆர் 20, ஐடபிள்யூ பொன்னி ரகங்களில் விதைப்பண்ணைகள் அமைக்கப்படுகின்றன. உளுந்தில் 5 ரகங்களும், பச்சைப் பயறு 4 ரகங்களும், தட்டையில் 2 ரகங்களிலும் விதைப்பண்ணை அமைக்கப்படுகிறது. இந்த விதைப்பண்ணைகளில், விதைத்த 35 நாள் அல்லது பூப்பதற்கு 15 நாட்களுக்கு முன் விதைப்பு அறிக்கை, 'சாதி' தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். பதிவுக்கட்டணம், வயல் ஆய்வு கட்டணம், பகுப்பாய்வு கட்டணங்கள், ஆய்வு, விதை சுத்தி, மாதிரி சேகரிப்பு, என உரிய நடைமுறைகளைப் பின்பற்றி, விதைச் சான்றட்டைகள் பெறப்பட வேண்டும். எனவே, சான்று பணியை மேற்கொள்ள, தனியார் மற்றும் அரசு விதை உற்பத்தியாளர்கள் உடனடியாக விதைச்சான்றுத் துறையில் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை