உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குஜராத் நிலக்கடலை விதை விவசாயிகளுக்கு அழைப்பு

குஜராத் நிலக்கடலை விதை விவசாயிகளுக்கு அழைப்பு

ஆனைமலை : 'ஆனைமலையில் குஜராத் மாநில நிலக்கடலை ரகம் இருப்பு வைத்து மானியத்தில் வழங்கப்படுகிறது,' என, ஆனைமலை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் தெரிவித்தார்.ஆனைமலை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் விவேகானந்தன் கூறியதாவது:ஆனைமலை வட்டாரத்தில், 2024ம் ஆண்டு அக்., மாதத்திலேயே ரபி வேளாண் பருவம் நல்ல மழையுடன் தொடங்கி உள்ளது. எனவே, ஆழ்குழாய் கிணறு, தெளிப்பு நீர் மற்றும் சொட்டு நீர் பாசன வசதியுடைய விவசாயிகள், எள், நிலக்கடலை போன்ற எண்ணெய் வித்து பயிர்களும், சோளம், கம்பு, துவரை, தட்டை, கொள்ளு போன்ற தானிய பயிர்களும் பயிரிட வேளாண் துறை பரிந்துரை செய்கிறது.கோட்டூர் வேளாண்மை விரிவாக்க மையத்தில், 110 நாட்கள் வயதுடைய குஜராத் மாநிலம் ஜூனாகத் பகுதியில் உருவாக்கப்பட்ட சிறப்பு உயர் விளைச்சல் நிலக்கடலை ரகம் (GJG32), நமது வட்டார விவசாயிகள் பயனடையும் வகையில் அரசால் தருவிக்கப்பட்டு வினியோகம் செய்ய தயார் நிலையில் உள்ளது.இந்த ரகம், ஏக்கருக்கு, 1,300 கிலோ மகசூல் கிடைக்கும். இதன் விற்பனை விலை கிலோவுக்கு, 122 ரூபாய்; அரசு மானியத்தில், கிலோ, 91 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. இந்த ரகம் விவசாயிகளுக்கு லாபகரமாக அமைவதால், ஒரு முறை சாகுபடி செய்தவர்கள் மீண்டும் விரும்பி பயிர் செய்வது வழக்கமாகியுள்ளது. எனவே, இந்த ரகத்தை விவசாயிகள் சாகுபடி செய்யலாம். விதை தேவைப்படுவோர் வேளாண் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை