உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிறுத்தையை கண்காணிக்க கேமரா

சிறுத்தையை கண்காணிக்க கேமரா

தொண்டாமுத்தூர் : போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட தேவராயபுரம் சுற்று பகுதி, குப்பேபாளையத்தில், வனப்பகுதியை ஒட்டி, சக்தி என்பவரின் தோட்டம் உள்ளது. இந்நிலையில், கடந்த, 26ம் தேதி, நள்ளிரவு, சக்தியின் தோட்டத்தில், சிறுத்தை வந்து சென்றுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். இதில், சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்க, வன எல்லைப்பகுதியில், 2 இடங்களில், தெர்மல் கேமராக்களை பொருத்தியுள்ளனர். சிறுத்தையின் நடமாட்டம் கண்காணிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக, வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை