உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  வீடு மாறியவர்கள், 18 வயது முடிந்தவர்கள் இன்று முகாம் படிவம் நிரப்பி விண்ணப்பம் அளிக்கலாம்

 வீடு மாறியவர்கள், 18 வயது முடிந்தவர்கள் இன்று முகாம் படிவம் நிரப்பி விண்ணப்பம் அளிக்கலாம்

கோவை, வரைவு பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், வரும் புத்தாண்டில் 18 வயது பூர்த்தியடையும் வாக்காளர்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வசதியாக இன்றும் நாளை ஞாயிற்றுக்கிழமையும் கோவையிலுள்ள 3,563 ஓட்டுச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. கோவை மாவட்டத்திலுள்ள பத்து சட்டசபை தொகுதிகளுக்குட்பட்ட 3,563 ஓட்டுச்சாவடிகளில் இன்றும் (சனிக்கிழமை) நாளை ஞாயிற்றுக்கிழமையும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. இதில் வாக்காளர்கள் தங்களது பெயர்களை சேர்க்க, நீக்க, முகவரி உள்ளிட்டவற்றில் மாற்றங்கள் செய்யலாம். இது குறித்து மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் மொத்தம் 1,062 ஓட்டுச்சாவடி மையங்களில் 3,563 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. 18 வயது நிரம்பியவர்கள் தங்களது ஆதார் அட்டை நகலுடன் விண்ணப்பிக்கலாம். புதிய வாக்காளர்கள் தங்களது பெயர் சேர்க்க படிவம் -6 ம், பெயர் நீக்க படிவம் -7 ம், முகவரி மாற்றம் மற்றும் திருத்தங்கள் செய்ய படிவம் 8 ம் பூர்த்தி செய்து வழங்கலாம். வாக்காளர்களுக்கு உதவ அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.மேலும் 1950 என்ற இலவச எண்ணில் தொடர்பு கொண்டு தங்களது சந்தேகங்களை வாக்காளர்கள் கேட்டறியலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ