உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆட்டோ ஓட்டுநர்களை நல வாரியத்தில் சேர்க்க முகாம்

ஆட்டோ ஓட்டுநர்களை நல வாரியத்தில் சேர்க்க முகாம்

கோவை: ஆட்டோ ஓட்டுநர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்களாக சேர்க்க போக்குவரத்து போலீசார் சார்பில் முகாம் பி.ஆர்.எஸ்., மைதானத்தில் துவங்கியது. கோவை மாநகர போக்குவரத்து போலீசார் சார்பில் தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியத்தில் ஆட்டோ ஓட்டுநர்களை உறுப்பினர்களாக சேர்க்க நேற்று மற்றும் இன்று இலவச சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று நடந்த முகாமை மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் துவக்கி வைத்தார். போக்குவரத்து துணை கமிஷனர் அசோக் குமார், ஆயுதப்படை துணை கமிஷனர் ராஜ்கண்ணா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ