கோவை அரசு மருத்துவமனையில் புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி
கோவை; கோவை அரசு மருத்துவமனையில், புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. டீன் நிர்மலா தலைமை வகித்து, பேரணியை துவக்கிவைத்தார். விழிப்புணர்வு நிகழ்வின் ஒரு பகுதியாக, கேன்சர் பாதிப்பு, சிகிச்சை முறைகள் குறித்த பயிற்சி மருத்துவர்கள் விழிப்புணர்வு நாடகம் நடத்தினர்.தொடர்ந்து, பேரணி, அரசு மருத்துவமனை, ரேஸ்கோர்ஸ் சாலை வழியாக, அரசு கலை கல்லுாரி வந்து, மீண்டும் மருத்துவமனையை வந்தடைந்தது. பேரணியின் போது, பதாகைகளை ஏந்தியும், கோஷங்கள் எழுப்பியும், மருத்துவ மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்வில், இருப்பிட மருத்துவ அலுவலர் சரவணபிரியா, மருத்துவமனை கண்காணிப்பாளர் கண்ணதாசன், புற்றுநோய் துறை மருத்துவர்கள் பிரபாகரன், ரம்யா, பாலமுருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.