கேன்சர் விழிப்புணர்வு ரீல்ஸ் வெளியீடு
கோவை; கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில், மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு தகவல்களை கொண்ட, இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ தொகுப்பு நேற்று வெளியிடப்பட்டது. பி அண்டு எஸ் குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் பிரியங்கா கார்த்திகேயனி, எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சுந்தர் இணைந்து ரீல்ஸ் வெளியிட்டனர். மார்பகப் புற்றுநோய்க்கான காரணங்கள், அறிகுறிகள் உள்ளிட்ட விழிப்புணர்வு தகவல்கள் வழங்க, 25 இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் உருவாக்கப்பட்டுள்ளன. டாக்டர் குகன் கூறியதாவது: 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் இடையே, மார்பகப் புற்றுநோய் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, 35 வயதினரிடம் இருமடங்காக அதிகரித்துள்ளது. உலக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தின் ஒரு பகுதியாக, இம்மாதம் முழுவதும் 0422- - 4389797, 4500203 ஆகிய எண்களில் முன்பதிவு செய்யும் பெண்களுக்கு, இலவச மேமோகிராம் பரிசோ தனை செய்யப்படும். இவ்வாறு, அவர் கூறினார். அறக்கட்டளையின் தலைமை செயல் அதிகாரி ராம்குமார், தலைமை நிர்வாக அதிகாரி மகேஷ் குமார், மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் ராஜகோபால், கண்காணிப்பாளர் டாக்டர் அழகப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.