உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கஞ்சா பறிமுதல்; ஒருவர் கைது

கஞ்சா பறிமுதல்; ஒருவர் கைது

போத்தனூர்; மதுக்கரை போலீஸ் எஸ்.ஐ.செந்தில்குமார். நேற்று காலை இவருக்கு மதுக்கரை மார்க்கெட், டாஸ்மாக் மதுக்கடை அருகே, க ஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. போலீசாருடன் அங்கு சென்று கண்காணித்தார். சந்தேகத்திற்கிடமான வகையில் அங்கிருந்த நபரை விசாரித்தார். அவர், பீகார் மாநிலத்தை சேர்ந்த சந்தீப்குமார், 27 என்பதும் விற்பனைக்காக, 1.2 கி.கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதும் தெரிந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்து ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். எஸ்.ஐ.புகாரின் படி, வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ