உள்ளூர் செய்திகள்

கஞ்சா விற்றவர் கைது

தொண்டாமுத்துார்; ஆலாந்துறை போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். பூலுவபட்டி, சித்திரைச்சாவடி பகுதியில் சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் இருந்த பையில் கஞ்சா இருந்தது. விசாரணையில், அவர் பூலுவபட்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தைச் சேர்ந்த விஜய் என்ற விஜயராஜ்,32 என்பது தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து, விஜயராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். விற்பனைக்கு வைத்திருந்த, 5.2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !