உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கார் - பைக் மோதல்; உணவக சமையலர் பலி

கார் - பைக் மோதல்; உணவக சமையலர் பலி

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே கார், பைக் மோதிய விபத்தில், உணவக சமையலர் இறந்தார்.ஆனைமலை அருகே உள்ள, ஆழியாறு பூங்கா பகுதியில் உள்ள தனியார் உணவகத்தின் முதன்மை சமையல்காரராக பணியாற்றியவர் மாணிக்கம், 26. இவர், நேற்றுமுன்தினம் சொந்த வேலையாக, நண்பரிடம் பைக் வாங்கி கொண்டு பொள்ளாச்சி நோக்கி சென்றார்.அப்போது, சுங்கம் பால் பண்ணை அருகே அதிவேகமாக எதிர் திசையில் வந்த கார், பைக் மீது மோதியது. விபத்தில் படுகாயமடைந்த மாணிக்கத்தை அப்பகுதி மக்கள் மீட்டு, பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.மருத்துவமனையில் பரிசோதனை செய்த டாக்டர்கள், வரும் வழியில் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து, கோட்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ