மேம்பாலத்தில் சென்ற காரில் தீ
கோவை: குட்செட் சாலை, உப்பிலிபாளையம் மேம்பாலம் ரவுண்டானா பகுதியில் நேற்று மாலை, பெண் ஒருவர் கார் ஓட்டி வந்தார். காரின் முன்பக்கம் புகை கிளம்பியதால் உடனே கீழே இறங்கினார். சிறிது நேரத்தில் தீ காரின் முன்பக்கம் முழுவதும் பரவியது. தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். காரின் முன்பக்கம் முழுவதும் சேதமானது. காரை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்த போலீசார், தீ ஏற்பட்டதற்கான காரணத்தை ஆய்வு செய்கின்றனர்.