உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சுவற்றில் மோதிய கார் ; இருவர் காயம்

சுவற்றில் மோதிய கார் ; இருவர் காயம்

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம்-அன்னூர் சாலையில் சுவற்றில் மோதிய காரால் பரபரப்பு ஏற்பட்டது.நீலகிரி மாவட்டம் எமரால்டு பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரும், மனைவியும் நேற்று காலை ஊட்டியிலிருந்து புறப்பட்டு அவிநாசி செல்வதற்காக தங்களது காரில் வந்து கொண்டிருந்தனர். அப்போது, மேட்டுப்பாளையம்-அன்னூர் சாலையில் உள்ள தனியார் திரையரங்கம் முன்பு வரும்போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் ஒரு பக்கம் இருந்து மறுபக்கம் சென்று தியேட்டரின் காம்பவுண்ட் சுவர் மீது மோதியது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. காயம் அடைந்த காரில் இருந்த கணவன், மனைவி இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். விபத்து குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.---


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை