உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் இருதய மருத்துவ முகாம்

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் இருதய மருத்துவ முகாம்

தொண்டாமுத்தூர்; ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில், உலக இருதய தினத்தை முன்னிட்டு, இலவச இருதய மருத்துவ முகாம், பச்சாபாளையத்தில் நடந்தது. பச்சாபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள், இலவச இருதய பரிசோதனை செய்து கொண்டனர். இருதய சிறப்பு டாக்டர்கள் ஆலோசனைகள் வழங்கினர். எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அலுவலர் ராம்குமார், முதன்மை நிர்வாக அதிகாரி மகேஷ் குமார், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் ராஜகோபால், மருத்துவ கண்காணிப்பாளர் அழகப்பன் மற்றும் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர். முகாமை துவக்கி வைத்த, எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சுந்தர் பேசுகையில்,இந்த முகாம் மூலம் அத்தியாவசிய இருதய பரிசோதனைகளை, பச்சாபாளையத்திற்கு கொண்டு வந்தது என்பது, சமுதாயத்திற்கு எங்களால் முடிந்த உதவியை செய்ய கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பாக பார்க்கிறோம். பச்சாபாளையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த மக்கள், இந்த இலவச முகாமை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை