உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / டாஸ்மாக் மதுபான கடைகளில்போஸ்டர் ஒட்டிய 15 பேர் மீது வழக்கு

டாஸ்மாக் மதுபான கடைகளில்போஸ்டர் ஒட்டிய 15 பேர் மீது வழக்கு

கோவை: டாஸ்மாக் மதுபான கடைகளில் முதல்வர் ஸ்டாலின் படம் அச்சிட்ட போஸ்டர் ஒட்டிய பா.ஜ.,வினர் 9 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.தமிழகத்தில் மதுபான கொள்முதலில், 1,000 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்துள்ளதை கண்டித்து பா.ஜ.,வினர் நேற்று முன்தினம் கோவை ரத்தினபுரி மற்றும் சரவணம்பட்டி பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடைகளில் ஸ்டாலின் படம் போட்ட போஸ்டர்களை ஒட்டினர்.இதையடுத்து, ரத்தினபுரி, கண்ணப்ப நகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் போஸ்டர் ஒட்டிய ரத்தினபுரி மண்டல் தலைவர் அர்ஜுனன், லட்சுமி, ராம்பிரபு, தாமரை கண்ணன், ராஜலட்சுமி, ஸ்ரீநிவாசன், ராமகிருஷ்ணன், சீனிவாசன், துரை ஆகிய ஒன்பது மீது ரத்தினபுரி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.இதேபோல், சரவணம்பட்டியில் உள்ள நான்கு மதுபான கடைகளில் போஸ்டர் ஒட்டிய கார்த்திகா, குருமணி, சிந்துஜா, நதியா, தேவி, சியாமளா ஆகியோர் மீது மதுபான கடை ஊழியர்கள் அளித்த புகாரில் சரவணம்பட்டி போலீசார் நான்கு வழக்குகள் பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி