உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.,வினர் மீது வழக்கு

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.,வினர் மீது வழக்கு

கோவை,; பா.ஜ., தலைவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து, கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அக்கட்சியினர் 333 பேர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மதுபான கொள்முதலில், ரூ.ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளதை கண்டித்து, நேற்று முன் தினம் பா.ஜ.,வினர் சென்னை, டாஸ்மாக் அலுவலகத்தை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதையடுத்து, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள், போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இதை கண்டித்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், பா.ஜ.,வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாநகரில் ஆர்.எஸ்.புரம், காந்திபார்க், ராஜவீதி, காந்திபுரம், துடியலுார், வெள்ளலுார், சுந்தராபுரம், குனியமுத்துார் உள்ளிட்ட பகுதிகளில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக, பொது இடத்தில் கூடியதாக பா.ஜ., மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் என 45 பெண்கள் உட்பட, 333 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ