ரூ.50 லட்சம் கையாடல்; நிறுவன மேலாளர் மீது வழக்கு
சூலுார்; சூலுார் அருகே தனியார் நிறுவனத்தில், 50 லட்சம் ரூபாய் கையாடல் செய்த மேலாளர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.சூலுார் அடுத்த காங்கயம் பாளையத்தில் தனியார் இன்ஜினியரிங் தொழிற்சாலையில், வரவு செலவு மற்றும் உதிரிபாகங்கள் இருப்பு விபரங்களை சரிபார்த்தபோது, 50 லட்சம் ரூபாய் முறைகேடு நடந்ததிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து நிர்வாகத்தினர் நடத்திய விசாரணையில், நிறுவனத்தில் மண்டல மேலாளராக பணிபுரிந்த ராஜேஷ், வாடிக்கையாளர்களுக்கு அதிக அளவில் பொருட்களை சப்ளை செய்ததாக, பில்களை போட்டு, வாடிக்கையாளர்களுக்கு குறைந்த அளவு பொருட்களை சப்ளை செய்தது தெரிந்தது. மீதமுள்ள பொருட்களை தன்னுடைய தந்தை பெயரில் கம்பெனி ஆரம்பித்து, அங்கு எடுத்து சென்று விற்பனை செய்து, 50 லட்சம் ரூபாயை கையாடல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, நிர்வாகத்தினர் ராஜேஷ் மீது சூலுார் போலீசாரிடம் புகார் அளித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.