பள்ளிவாசல் நிர்வாகியை தாக்கியவர் மீது வழக்கு
போத்தனூர் : கோவை, கரும்புக்கடையிலுள்ள சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசலின் செயலாளர் இம்ரான்கான், 45. நேற்று முன்தினம் பள்ளிவாசலுக்கு வந்த நஸீர் என்பவர், புகைப்படம் எடுத்தார். இதுகுறித்து அங்கிருந்த இம்ரான்கான் கேட்டபோது, தங்களது வக்கீல் கூறியதால் புகைப்படம் எடுப்பதாக கூறியுள்ளார். இதற்கு பள்ளிவாசலின் முன்னாள் நிர்வாகிகள் ஹபீப் ரஹ்மான், அப்துல் லத்தீப், சகாபுதீன், நவுசாத் ஆகியோர் தூண்டுதலாக இருந்ததும் தெரிந்தது.தொடர்ந்து நஸீர், இம்ரான்கானை மிரட்டி, கைகளால் தாக்கிவிட்டு அங்கிருந்து சென்றார். இம்ரான்கான் புகாரில், கரும்புக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.