இன்டர்நெட் மையம் ஒயரை துண்டித்த இருவர் மீது வழக்கு
கோவை:கணபதி, ஆர்.கே.புரத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார். அவிநாசி ரோட்டில் உள்ள ரெடிலிங்க் இன்டர்நெட் சர்வீஸ் சென்டர் நடத்தி வருகிறார். தமிழ்நாடு அரசு கேபிள் 'டிவி' கார்ப்பரேஷன் வாயிலாக இணைப்பு பெற்றுள்ளார். நள்ளிரவில், இவரது அலுவலக இணைப்பு கேபிள் துண்டிக்கப்பட்டதால், அலாரம் எழுப்பியது. இரவு பணியில் இருந்த ஊழியர் சென்று பார்த்தபோது, இருவர் தப்பி ஓடினர். ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் விசாரிக்கையில், அதே நிறுவனத்தில் பணியாற்றிய முன்னாள் ஊழியர்கள் செல்வமுருகன், வசந்தகுமார் என்பது தெரியவந்தது. இருவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.