உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காரை திருப்பி கேட்ட நபரை தாக்கிய இருவர் மீது வழக்கு

காரை திருப்பி கேட்ட நபரை தாக்கிய இருவர் மீது வழக்கு

கோவை; அடமானம் வைத்த காரை திருப்பிக் கேட்டவரை, தாக்கிய இருவர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். கோவை குனியமுத்துார் குறிஞ்சி நகரை சேர்ந்தவர் முகமது சன்பர், 29; ரியல் எஸ்டேட் முகவர். இவர் தனது காரை கோவை குனியமுத்துாரை சேர்ந்த சர்ஜூன், 35 மற்றும் அப்ரிதி, 34 ஆகியோரிடம் அடகு வைத்திருந்தார். நேற்று முன்தினம், கோவை தெற்கு உக்கடம் அன்பு நகர் பகுதிக்கு சென்ற முகமது சன்பர், சர்ஜூன், அப்ரிதி ஆகியோரிடம் அடகு வைத்த தனது காரை திரும்ப தருமாறு கேட்டார். அப்போது இருவரும் முகமது சன்பரை தகாத வார்த்தைகளால் திட்டி, கூர்மையான ஆயுதத்தால் தாக்கினர். இதில் முகமது சன்பரின் புருவப்பகுதியில் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், வழக்கு பதிந்த கடைவீதி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை