உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சி.டி.சி.ஏ., ஐந்தாவது டிவிஷன் கிரிக்கெட்; ஐந்து விக்கெட் வீழ்த்தி வீரர் அபாரம்

சி.டி.சி.ஏ., ஐந்தாவது டிவிஷன் கிரிக்கெட்; ஐந்து விக்கெட் வீழ்த்தி வீரர் அபாரம்

கோவை; கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம்(சி.டி.சி.ஏ.,) சார்பில், ஐந்தாவது டிவிஷன் போட்டி சி.ஐ.டி., உள்ளிட்ட மைதானங்களில் நடக்கிறது. டெவில் ஸ்ட்ரோக்கர்ஸ் கிரிக்கெட் கிளப் அணியும், அக்ஷயா இன்ஜி., மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி அணியும் மோதின.முதலில் பேட்டிங் செய்த, டெவில் ஸ்ட்ரோக்கர்ஸ் அணியினர், 46.2 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 192 ரன்கள் எடுத்தனர். வீரர் கார்த்திக், 76 ரன்கள் எடுத்தார். எதிரணி வீரர் நிர்மல் குமார் ஐந்து விக்கெட்கள் வீழ்த்தினார்.அடுத்த விளையாடிய அக்ஷயா கல்லுாரி வீரர்கள், 43.4 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்புக்கு, 193 ரன்கள் எடுத்தனர். வீரர்கள் ஆசிப் அகமது, 61 ரன்களும், பிரபு, 36 ரன்களும் எடுத்தனர். ஆறாவது டிவிஷன் போட்டியில் பி.எஸ்.ஜி., டெக் கிரிக்கெட் கிளப் அணியும், ஆரிஜின் ரீஜனல் கிரிக்கெட் கிளப் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த, பி.எஸ்.ஜி., அணியினர், 27.3 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 48 ரன்கள் எடுத்தனர். எதிரணி வீரர்கள் ஆரியன் பாப்னா, ஆதித்யா ஆகியோர் தலா நான்கு விக்கெட்கள் வீழ்த்தினர்.அடுத்து விளையாடிய, ஆரிஜின் ரீஜனல் கிரிக்கெட் கிளப் அணியினர், 8.2 ஓவரில் மூன்று விக்கெட் இழப்புக்கு, 49 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றனர். தொடர்ந்து, போட்டிகள் நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை