உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சி.டி.சி.ஏ., ஐந்தாவது டிவிஷன் கிரிக்கெட் போட்டி; சன் ஸ்டார், ஸ்ரீ ராமகிருஷ்ணா அணிகள் அபாரம்

சி.டி.சி.ஏ., ஐந்தாவது டிவிஷன் கிரிக்கெட் போட்டி; சன் ஸ்டார், ஸ்ரீ ராமகிருஷ்ணா அணிகள் அபாரம்

கோவை,; கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் (சி.டி.சி.ஏ.,) சார்பில் ஐந்தாவது டிவிஷன் போட்டி எஸ்.என்.எம்.வி., பி.எஸ்.ஜி., உள்ளிட்ட மைதானங்களில் நடக்கிறது.சன் ஸ்டார் அணியும், டெவில் ஸ்ட்ரோக்கர்ஸ் கிரிக்கெட் கிளப் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த சன் ஸ்டார் அணியினர், 50 ஓவரில் எட்டு விக்கெட் இழப்புக்கு, 259 ரன்கள் எடுத்தனர்.வீரர்கள் தமிழ் அரசு, 55 ரன்களும், சந்திர சேகரன், 41 ரன்களும், பிரவீன் குமார், 37 ரன்களும் எடுத்தனர். எதிரணி வீரர் ரஞ்சித்குமார், நான்கு விக்கெட்கள் வீழ்த்தினார்.டெவில் ஸ்ட்ரோக்கர்ஸ் அணியினரோ, 44 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 210 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.வீரர்கள் பிரமீத், 42 ரன்களும், ஸ்ரீநிவாசன், 37 ரன்களும், மோகன்குமார், 35 ரன்களும், பிரபு, 34 ரன்களும், கார்த்திக், 32 ரன்களும் எடுத்தனர். எதிரணி வீரர் அரவிந்த் குமார் மூன்று விக்கெட்கள் வீழ்த்தினார்.ஆறாவது டிவிஷன் போட்டியில், ஸ்ரீ ராமகிருஷ்ணா எம்.வி.சி.சி., அணியும், சி.டி.சி.ஏ., ஜூனியர் கோல்ட்ஸ் அணியும் மோதின. பேட்டிங் செய்த, ஸ்ரீ ராமகிருஷ்ணா அணி, 41 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 230 ரன்கள் எடுத்தனர்.வீரர்கள் சோமு, 56 ரன்களும், ஸ்ரீ ராம், 43 ரன்களும், சத்ய நாராயணன், 35 ரன்களும் எடுத்தனர். எதிரணி வீரர் அஷ்வின், நான்கு விக்கெட்கள் வீழ்த்தினார். அடுத்து விளையாடிய, சி.டி.சி.ஏ., அணியினர், 50 ஓவரில் எட்டு விக்கெட் இழப்புக்கு, 161 ரன்கள் எடுத்தனர்.வீரர் ஹிரித்திக், 46 ரன்கள் எடுத்தார். எதிரணி வீரர் சாய் கோகுல் மூன்று விக்கெட்கள் வீழ்த்தி, அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். தொடர்ந்து, போட்டிகள் நடந்துவருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை