சி.டி.சி.ஏ. முதல் டிவிஷன் கிரிக்கெட் ஜாலி ரோவர்ஸ் அகிலேஸ்வர் சதம்
கோவை, டிச. 19- கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம்(சி.டி.சி.ஏ.) சார்பில் முதல் டிவிஷன் போட்டி எஸ்.ஆர்.ஐ.ஐ., சி.ஏ. உள்ளிட்ட மைதானங்களில் நடக்கிறது. எஸ்.என்.ஆர். சன்ஸ் டிரஸ்ட் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும், ஜாலி ரோவர்ஸ் கிரிக்கெட் கிளப் அணியும் மோதின. எஸ்.என்.ஆர். அணி 45.3 ஓவரில் 152 ரன் எடுத்து ஆட்டம் இழந்தது. ஜாலி ரோவர்ஸ் 14.2 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு, 153 ரன் எடுத்து வெற்றி பெற்றது. அகிலேஸ்வர் 100 ரன் எடுத்தார். அடுத்து, இ.ஏ.பி. கிரிக்கெட் அகடமி அணியும், கோவை டஸ்கர்ஸ் அணியும் மோதின. இ.ஏ.பி. 179 ரன் எடுத்து, 48.4 ஓவரில் ஆட்டம் இழந்தது. முகமது ஆசிக் 54 ரன் எடுத்தார். டஸ்கர்சின் அரவிந்த் 3 விக்கெட் வீழ்த்தினார். கோவை டஸ்கர்ஸ் அணியினர், 28.2 ஓவரில் 86 ரன் எடுத்து ஆட்டம் இழந்தது. அதில் விஜய் எடுத்த 56 ரன்னும் அடக்கம். இ.ஏ.பி.யின் மோகன் பிரசாத் 5 விக்கெட், மிதுன் 3 விக்கெட் வீழ்த்தினர். போட்டிகள் தொடர்கின்றன.