தேசிய போக்குவரத்து தினம் இனிப்பு வழங்கி வாழ்த்து
உடுமலை : உடுமலை, கோட்டமங்கலம் நேஷனல் மாடல் சீனியர் செகண்டரி பள்ளி மாணவ, மாணவியர், நவ., 10, தேசிய போக்குவரத்து தினத்தை முன்னிட்டு, உடுமலை பஸ் ஸ்டாண்டில், பயணிகளின் பாதுகாப்பான பயணத்திற்கான சேவையில் ஈடுபட்டுள்ள, டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கு, வாழ்த்து அட்டைகளையும், இனிப்புகளையும் வழங்கி, வாழ்த்து தெரிவித்தனர்.