மத்திய கூட்டுறவு வங்கி பொதுப்பேரவை கூட்டம்
கோவை; கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின், 115வது பொதுப்பேரவை கூட்டம் நடந்தது. நிர்வாகப் பிரிவு உதவி பொது மேலாளர் ரமேஷ் வரவேற்றார். சங்கங்களில் சேகரிக்கப்பட்ட வைப்புகள் குறித்து, வங்கியின் மேலாண்மை இயக்குனர் ராமகிருஷ்ணன் விளக்கினார். பொது மேலாளர் ஆனந்தி, ஆண்டறிக்கை வாசித்ததும், தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கோவை மாவட்டத்தில் ஐந்து சங்கங்களுக்கும், திருப்பூர் மாவட்டத்தில் 2 சங்கங்களுக்கும் வழங்கிய ரூ.2.07 கோடியை வட்டி தள்ளுபடி செய்து, இனி வரும் காலங்களில் சங்கங்கள் சிறப்பாக செயல்படுவது குறித்து, மண்டல இணை பதிவாளர் அழகிரி பேசினார். துடியலுார் கூட்டுறவு விவசாய ஸ்தாபன மேலாண் இயக்குனர் பழனிசாமி, திருப்பூர் மண்டல இணை பதிவாளர் பிரபு, கோவை மண்டல தணிக்கை துறை இணை இயக்குனர் வெங்கட சுப்ரமணியம், நபார்டு வங்கி கோவை மாவட்ட வளர்ச்சி அலுவலர் திருமலா ராவ் ஆகியோர் பேசினர். வங்கியின் துணை பதிவாளர் தியாகு நன்றி கூறினார்.