மத்திய அரசின் சாதனை விளக்க கூட்டம்
சூலுார்; சூலுார் தெற்கு ஒன்றிய பா.ஜ., சார்பில், பிரதமர் நரேந்திர மோடியின், 11 ஆண்டு கால சாதனைகளை விளக்கும் கூட்டம், ஒன்றிய தலைவர் சுபாஷினி செந்தில்குமார் தலைமையில் இருகூரில் நடந்தது. கோவை வடக்கு மாவட்ட பா.ஜ., தலைவர் மாரிமுத்து பேசியதாவது:நாட்டு மக்கள் அனைவரும் பயன் பெறும் வகையில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பெண் குழந்தைகளுக்கான செல்வ மகள் சேமிப்பு திட்டம் முதல், 70 வயதுக்கு மேற்பட்டோருக்கான காப்பீடு திட்டம் வரை பல கோடி மக்கள் பயன்பெற்றுள்ளனர். 150 க்கும் மேற்பட்ட நலத்திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இவற்றை மக்கள் மத்தியில், தொண்டர்கள் பிரசாரம் செய்ய வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.பொதுச்செயலாளர் கோபால்சாமி, துணைத்தலைவர் சிதம்பரம், சத்தியமூர்த்தி, சக்திவேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.