உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மத்திய சிறைச்சாலை கட்டுமான பணி விறுவிறு

மத்திய சிறைச்சாலை கட்டுமான பணி விறுவிறு

பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், பிளிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட ஒன்னிபாளையம் ரோட்டில் சுமார், 90 ஏக்கர் பரப்பில் மத்திய சிறைச்சாலை கட்டுமான பணி துவங்கி நடந்து வருகிறது. சிறைச்சாலை கட்டுமான பணிக்காக ஒன்னிபாளையம், ஒன்னிபாளையம் புதூர், கரிச்சி பாளையம் உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் சாலை அகற்றப்பட்டு, அக்கிராமங்களில் வசிக்கும் மக்கள் கக்கராயன் மலையை ஒட்டியுள்ள வடக்கு பகுதியில் புதிதாக அமைக்கப்படும் சாலையை பயன்படுத்த கொள்ளலாம் என, தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த இடங்களை மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ., செல்வராஜ் ஆய்வு செய்தார். அங்குள்ள அரசு அதிகாரிகளுடன் மத்திய சிறை அமைய உள்ள பகுதி, கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படும் இடம் ஆகியவை குறித்தும் கேட்டறிந்தார்.கரிச்சி பாளையம் உள்ளிட்ட மூன்று கிராம மக்களும் தாராளமாக வந்து செல்லும் வகையில், கக்கராயன் மலையை ஒட்டிய வடக்கு பகுதியில் சாலை பணி அமைக்க வேண்டும் என அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சியில் அ.தி.மு.க., மற்றும் பா.ஜ., கட்சிகளைச் சார்ந்த மாவட்ட, ஒன்றிய அளவிலான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை