உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தூறல் மழைக்கு வாய்ப்பு; ஆய்வு மையம் கணிப்பு

தூறல் மழைக்கு வாய்ப்பு; ஆய்வு மையம் கணிப்பு

கோவை; வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் சத்தியமூர்த்தி அறிக்கை: கோவை மாவட்டத்தில், வரும், 5 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஆங்காங்கு லேசான துாறல் மழை எதிர்பார்க்கப்படுகிறது. அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் வரையும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ் வரையும் பதிவாகக்கூடும். காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால், பூச்சிக்கொல்லி தெளிக்கையில் கவனம் தேவை. 30 நாட்களான நெல்லுக்கு யூரியா ஏக்கருக்கு, 30 கிலோ மேலுரமாக இடலாம். கறவை மாடுகளில் மடிவீக்க நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. பால் கறப்பதற்கு முன்னும், பின்னும் 1 சதவீத பொட்டாசியம் பர்மாங்கனேட் கலவையில் கழுவ வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை