உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / என்.எம்.எம்.எஸ்., தேர்வு தேதி மாற்றம்

என்.எம்.எம்.எஸ்., தேர்வு தேதி மாற்றம்

திருப்பூர்: எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு டிச. 12ம் தேதி நடக்க இருந்த தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டத்தேர்வு, 2027 ஜன. 9ம் தேதி நடக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய எட்டாம் வகுப்பு மாணவர்களின் இடைநிற்றலை தடுக்க, கல்வி உதவித்தொகை வழங்க, மத்திய கல்வி அமைச்சகத்தால், தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகைத் திட்டத் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. தேர்வில் வெற்றி பெறும் மாணவருக்கு ஒன்பது முதல் பிளஸ் 2 வகுப்பு வரை, மாதம் ஆயிரம் ரூபாய் வீதம், ஆண்டுக்கு, 12 ஆயிரம் வீதம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியர் விண்ணப்பிக்க அக்., மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. டிச. 12ம் தேதி தேர்வு நடைபெற இருந்தது. தேர்வுக்கு கூடுதலாக மாணவ, மாணவியர் விண்ணப்பிக்க ஏதுவாக, விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை, டிச. 4 வரை நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், 2027 ஜன. 9ம் தேதி (சனிக்கிழமை) நடக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த, அரசு தேர்வுகள் இயக்குனரிடம் இருந்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி