உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்

ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்

கோவை:பெங்களூரு கன்டோன்மென்ட் - ஒயிட் பீல்டு ரயில்வே ஸ்டேஷன்கள் இடையே பல்வேறு இன்ஜினியரிங் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அதனால், கோவை - பெங்களூரு கன்டோன்மென்ட் (20642) வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் பையனப்பள்ளி வரை மட்டுமே இயக்கப்படும். இந்த ரயில், எஸ்.எம்.வி.டி., பெங்களூரு ரயில்வே ஸ்டேஷனுக்குச் செல்லும். பெங்களூரு கன்டோன்மென்ட் - கோவை (20641) வந்தேபாரத் ரயில், எஸ்.எம்.வி.டி., பெங்களூரு ரயில்வே ஸ்டேஷனில் இருந்து மதியம் 2:20 மணிக்கு புறப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விரு ரயில்களும் பையனப்பள்ளி ரயில்வே ஸ்டேஷனில் இரு நிமிடம் நின்று செல்லும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி